Share

இராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூயில் திடீரென்று வந்த ஆயுதம் தாங்கிய கமாண்டோ படையினர்

சென்னை இராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ என்கிற பிரபல வணிக வளாகம் உள்ளது. இன்று நள்ளிரவு 2 மணி அளவில் அந்த ஷாப்பிங் மாலை சுற்றி காவல் துறையின் வாகனங்கள் அரண் அமைத்து நின்றன.

திடீரென்று வந்த ஆயுதம் தாங்கிய கமாண்டோ படையினர், ஷாப்பிங் மாலுக்குள் செல்லும் பாதைகளை மறித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். வெளியே இருந்த பொதுமக்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

அந்நேரம் மாலுக்குள் இருந்து இரவுக் காட்சி சினிமா முடிந்து வெளியே வந்த பொதுமக்கள், கமாண்டோ படையினர் சுற்றி வளைத்து இருப்பதை கண்டு அச்சப்பட்டனர்.

கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை எடுத்துக்கொண்டு வெளியே வரமுயன்ற அவர்கள், மாலுக்குள் ஏதோ விபரீதம் நடக்கிறது என்று நினைத்து, பதற்றம் அடைந்தனர். பின்னர்தான் அது தமிழக காவல் துறை கமொண்டோ பிரிவின் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை எனத் தெரியவந்தது.

Leave a Comment