Share
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நலிவடைந்த குழந்தைகள் சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்யவழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-2014ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன், எதிர்வரும் 2017-2018ம் கல்வியாண்டிற்கு திருச்சி மாவட்டத்திலுள்ள 313 சிறுபான்மையற்ற சுய நிதிபள்ளிகளில் (மெட்ரிக்ஃமழலையர் மற்றும துவக்கப்பள்ளி) நுழைவு நிலை (டுமுபு ஃ 1 ளுவன) வகுப்பில் 25 சதவிதம் ஒதுக்கீட்டின் கீழ் 4143 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வசதி றறற.னபந.வn.பழஎ.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம செய்யப்பட்ட விபரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறும் செய்தியாக அளிக்கப்படும்.

முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

மாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்களை பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்;தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்குக் குலுக்கள் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.

இன்று முதல்(20.04.2017) முதல் மே 18ம் தேதிவரை இணைவழியில் விண்ணப்பிக்கலாம். மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.துரைராஜன் அவர்களை நேரிலோ அல்லது 73737 07123 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Related posts:

எடப்பாடி பழனிசாமி பதவியேற்றக் கையோடு பெங்களூரு சிறைக்குச் செல்லவிருக்கிறார்
அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும் முன்னரே ஜெயலலிதாவை தாக்கியுள்ளனர்
பிரிட்ஜோ எனது மடியிலேயே சரிந்து உயிரிழந்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
தமிழும் பொதுவுடைமை இயக்கங்களும் நிகழ்வு மூத்த தலைவர் தா.பாண்டியன் பங்கேற்பு
மருத்துவ முதுகலை படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Comment