Share

பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் ஊழல் குட்டையில் ஊறியவர்கள் தீபா விமர்சித்துள்ளார்

அதிமுகவின் இரு அணிகளும் கபட நாடகம் ஆடுகின்றனர் என்றும் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் ஊழல் குட்டையில் ஊறியவர்கள் தான் என தீபா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவர் கூறுகையில், ஓ.பி.எஸ், சசிகலா இருவருமே ஊழல் என்னும் குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

இவர்களால் இப்போது உண்மையான துரோகத்தை மக்களும் அதிமுக தொண்டர்களும் அடையாளம் கண்டுள்ளனர்.

ஏற்கனவே திட்டமிடப்பட்டு, எழுதிவைக்கப்பட்ட நாடகத்தையே தற்போது ஓ.பி.எஸ் நடத்திக் கொண்டிருக்கிறார்.

மேலும், இரட்டை இலை சின்னத்தை முடக்க காரணமானவர்களே, சின்னத்தை தற்போது மீட்க போவதாக நாடகமாடி வருகின்றனர் .

இவர்கள் இருவரும் இனைவது பற்றிய பரபரப்போ, பதற்றமோ மக்களிடத்தில் சிறிதளவு கூட இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment