Share
2 புதிய போர் போட்டும் தண்ணீர் இல்லை – மக்கள் சாலைமறியல்

2 புதிய போர் போட்டும் தண்ணீர் இல்லை – மக்கள் சாலைமறியல்

திருவண்ணாமலை, ஏப் 21:

குடிநீர் சப்ளை இல்லாததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் தினசரி குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதும், அவர்களை போலீசார் மற்றும் யூனியன் நிர்வாகம் சமாதானம் செய்வதும் தினசரி நடைபெறும் நிகழ்சியாக உள்ளது. வழக்கம் போல் நேற்றும் மலை கிராமமான மோத்தக்கல்
மற்றும் நவம்பட்டு கிராம மக்கள் தங்களுக்கு  பல நாட்களாக குடிநீர் வரவில்லை என கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை வழக்கம் போல் போலீசார் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்வதாக கூறி சமாதானபடுத்தி
கலைத்த போக செய்துள்ளனர். இது குறித்த யூனியன் நிர்வாகத்திற்க தகவல் தர பிடிஓ கிருஷ்ணமூர்த்தி அவசரமாக மோத்தக்கல்லில் இரு இடங்களில் 700 அடி அளவிற்கு போர் போட்டும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் நிர்வாகம்
குடிநீர் பிரச்சனையினை போக்க வழி தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளனர்.

Related posts:

ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் : முதல்வர் அறிவிப்பு
திருவள்ளுவர் மன்றம் சார்பில் சிலம்பு விழா
செய்யாறு அருகே ஏடிஎம் கார்டை திருடி துணிகரம் விவசாயியின் வங்கிக் கணக்கில் ரூ. 10 ஆயிரம் அபேஸ்
ஜெயலலிதா- சோபன் பாபு எனது பெற்றோர் ஒருவர் உயர்நீதிமன்ற மனுவில் குறிப்பிட்டுள்ளது
விவசாயகளின் போராட்டத்திற்கு ஆதரவான 'பந்த்' எ.வ.வேலு எம்எல்ஏ உள்பட 2 ஆயிரம் பேர் கைது

Leave a Comment