Share

விண்ணப்பிக்க தவறிய 10ம் வகுப்பு தனி தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, பிப் 16:

10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க
தவறிய தனி தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்)
விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு இயக்ககம்  அறிவித்துள்ளது. இதுகுறித்து
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் விடுத்துள்ள
செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10ம்
வகுப்பு பொதுத் தேர்வுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்த தேதிக்குள்
விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்மூலம்
(தட்கல்) இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம் கல்வி மாவட்ட வாரியாக
அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க உள்ளவர்கள் அறிவியல் பாடத்தில் செயல்முறை பயிற்சி வகுப்பில்
கலந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் செய்முறை பயிற்சி வகுப்பில்
கலந்து கொண்டதற்கான உரிய சான்றிதழினை கருத்தியல் தேர்வுக்கு
விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்க வேண்டும். புதிய பாட திட்டத்தில
தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் தோல்வியுற்ற பாடங்களை எழுத தட்கலில்
விண்ணப்பிக்கலாம். பழைய பாட திட்டத்தில் அறிவியல் பாடத்தை தவிர மற்ற
பாடங்களில் தோல்வியுற்றவர்கள் தோல்வியடைந்த பாடங்களை மட்டும் புதிய
பாடத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். இதற்காக விண்ணப்பதாரர்கள் தேர்வு
கட்டணமாக ரூ. 125, சிறப்பு கட்டணமாக ரூ. 500 மற்றும் பதிவுக்கட்டணம் ரூ.
50 என மொத்தம் ரூ. 675 சேவை மையத்தில் செலுத்த வேண்டும், விண்ணப்பிக்கும்
தேர்வர்கள் ஏற்கனவே 10ம் வகுப்பு தேர்வெழுதி தோல்வியுற்றவராக இருப்பின்
மதிப்பெண் சான்றிதழ்களின் நகல், அறிவியல் பாட செயல்முறை வகுப்பில் கலந்து
கொண்டற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும், நேரடியாக முதன்முறையாக
தேர்வு எழுதுபவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான அசல்
மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். தட்கல் திட்டத்தில்
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு திருநெல்வேலி, மதுரை, கோவை,
திருச்சி, கடலூர், வேலூர், மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மட்டும் தேர்வு
மையம் அமைக்கப்படும். மேலும் இதுகுறித்து தகவல்களுக்கும் விண்ணப்ப
மையங்களை அறிந்து கொள்ளலாம். ஷ்ஷ்ஷ்.பீரீமீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணைய
தளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment