Share
மாணவர்கள் மெரீனாவில் மீண்டும் களம் இறங்கிவிட்டனர்

மாணவர்கள் மெரீனாவில் மீண்டும் களம் இறங்கிவிட்டனர்

தமிழகம் சமீப காலமாகவே பெரும் பரபரப்பாகவே உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லட்ச்சக்கணக்கான இளைஞர்கள் கைக்கோர்த்து போராடினார்கள்.

அதில் வெற்றியும் பெற்றார்கள், தற்போது டெல்லியில் 20 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றார்கள்.

ஆனால், அரசாங்கம் காது கொடுத்து கூட கேட்கவில்லை, எல்லோரும் எதிர்த்த ஹைட்ரோகார்பன் திட்டத்தில் கையெழுத்தும் போட்டுவிட்டது.

இதை எதிர்த்து மாணவர்கள் மெரீனாவில் மீண்டும் களம் இறங்கிவிட்டனர், நேரம் ஆக ஆக இளைஞர்கள் கூட்டம் அலைமோதுகின்றது.

மேலும், தங்களுக்கு ஊடகங்கள் ஆதரவு தருமாறு இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர், மேலும் போலீசாரின் அறிவுறுத்தலை அடுத்து மெரீனா பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றது.

Related posts:

திருவண்ணாமலையில் அருணை தமிழ்ச் சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் எ.வ.வேலு எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை அருகே பெண் தற்கொலை
திமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி தமிழகத்தை காப்பாற்ற ஸ்டாலினால் தான் முடியும்
56,996 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
போராட்டத்தைக் கைவிடுங்கள்... நல்வாழ்வு காத்திருக்கிறது... தமிழிசை வேண்டுகோள்!

Leave a Comment