Share
நாய், பூனைக்கறிக்கு தைவானில் தடை! மீறினால் இரண்டு ஆண்டு சிறை

நாய், பூனைக்கறிக்கு தைவானில் தடை! மீறினால் இரண்டு ஆண்டு சிறை

நாய் மற்றும் பூனைக் கறிக்கு தடைவிதிக்கும் வகையில் தைவான் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, நாய் அல்லது பூனையை கொல்பவர்களுக்கு இந்திய ரூபாய்க்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நாய்கறி உண்பது சாதாரண ஒரு விஷயமாக இருந்து வந்தது. ஆனால், சில ஆண்டுகளாக நாய்கறி மற்றும் பூனைக்கறி உண்பது குறைந்துள்ளது. சென்ற வருடத்தில் ராணுவ வீரர்கள் ஒரு நாயை இரும்பு சங்கிலியால் கழுத்தை நெரித்து கொல்லும் வீடியோ அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்துக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து அந்த ராணுவ வீரர்கள் மன்னிப்பு கேட்டனர். இத்தகைய சூழலில் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எண்ணம் மக்கள் மனதில் உருவாகத் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் நாய்கறி மற்றும் பூனைக்கறிக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அந்தச் சட்டத்தின்படி, நாய்களைக் கொல்பவர்கள் அல்லது சித்ரவதை செய்பவர்கள் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், மீண்டும் மீண்டும் அத்தகையை செயலில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

Related posts:

புலிகள் இயக்க மாஜி தளபதி கருணா கைது
உலகம் நீரில் மூழ்குமா..? சுனாமி அலை ஆபத்து 2000 அடி உயரத்திற்கு ஏற்பட வாய்ப்பு !
ட்ரம்ப் குடியுரிமைக் கொள்கை: ஒபாமா விமர்சனம்
WWE மல்யுத்த போட்டி வீரர் அண்டர்டேக்கருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை
தன் நாக்கை வைத்து பேனின் இறக்கைகளை நிறுத்தும் சம்பவம் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Leave a Comment