Share
கள்ளச் சாராயம் பறிமுதல்

கள்ளச் சாராயம் பறிமுதல்

திருவண்ணாமலை, மார். 9:

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியில்
போலீசாரின் அதிரடி ரெய்டில் 300 லிட்டர் கள்ளச்சாராயம் கைபற்றி
அழிக்கப்பட்டது. தானிப்பாடி பகுதியான மலையனூர்
செக்கடி,ரெட்டியார்பாளையம்,பீமரப்பட்டி,மோத்தக்கல் காலனி,மோத்தக்கல் ஆகிய
பகுதிகளில் தானிப்பாடி எஸ்எஸ்ஐ சுப்ரமணியன் தலைமையில் நேற்று முன் தினம்
திடீர் கள்ளச் சாராய வேட்டையில் ஈடுபட்ட போது அண்ணாமலை (38), மஞ்சு (54),
ஆறுமுகம் (42), முனுசாமி (49) மற்றும் லட்சுமணன் (42) ஆகியோர் வீட்டின்
பின்புறம் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் கள்ளச்
சாராயத்தை போலீசார் கைபற்றி அழித்தனர். இவற்றின் மதிப்பு ரூ 2000 ஆகும்.
கள்ளச் சாராய வியாபாரிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும்
தொடர்ந்து இந்த சமூக விரோத செயல்களை தொடர்ந்து செய்பவர்கள் மீது குண்டர்
சட்டம் பாயுமென எச்சரித்துள்ளனர்.

Related posts:

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் அரசு ஊழியர் சங்க மாநில ...
லெட்டர் பேடில் சசிகலா பெயர் பெரிதானது அம்மாவின் பெயர் சிறிதானது
ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்களை தாக்க முயன்ற ஊழியர்
சமூக வயைதளங்களில் பெண் ஆன்மீக பக்தர்களை அவதூறு பரப்பிய டிராபிக் ராமசாமியை குண்டர் சட்டத்தில் கைது செ...
2011 முதல் 2017 ஆண்டு வரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 3 இலட்சத்து 13 ஆயித்து 250 பணிகள், ஆயிர...

Leave a Comment