Share
கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர்  அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர்
அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா துவங்கியது. இவ்விழாவில் திருமதி.பு.மு. ராணி பி.ஏ. காவல் துறை கண்காணிப்பாளர்அனைத்து மகளிர் காவல் நிலையம் கரூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். அவர்களுடைய சிறப்புரையில்; சமுதாயத்தில் பெண்கள் தன்னை பாதுகாத்து வாழவேண்டும் என்றும் தனக்காக வாழாமல் பிறருக்காக கடவுளிடம் பிராத்தனை செய்யவேண்டும் என்றும் பெண்கள் தன்நம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் சிறப்பாக உரையாற்றினார். வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு சிறப்புவிருந்தினர் அவர்கள் பரிசுகளை வழங்கி மாணவிகளை பாராட்டினார். கல்லூரியின் செயலாளர் யத்தீஸ்வரி நீலக்கண்டபிரியா அம்பா முதல்வர் திருமதி. த.மணிமேகலை ஆகியோர் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் திருமதி த.மணிமேகலை வரவேற்புரை ஆற்றினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் ஆர்.பரணி நன்றியுரை ஆற்றினார். விவேகானந்தா பள்ளி செயலர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷரானந்த மகராஜ் அவர்கள் ஆசியுரை வழங்கினார். இவ்விளையாட்டு விழாவில் அணிவகுப்பு கோலாட்டம் தேசிய ஒருமைப்பாடு நடனம் தொடர்ஓட்டம் யோகாசனம் பிரமிடு சிலம்பாட்டம் கரகாட்டம் போன்ற பலவகையான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இவ்விழாற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி இயக்குநர் திருமதி.கே.பூங்கொடி செய்திருந்து 2016 – 17 ஆம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை படித்தார்.

Related posts:

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
தானிப்பாடி அருகே மனுநீதி முகாம் 117 நபர்களுக்கு நலதிட்ட உதவிகள்
கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி உள்பட 3 பேர் கைது
அரசு கலைக்கல்லூரியில் 1223 மாணவ மாணவிகளுக்கு பட்டயங்கள் ஆட்சியர் பிரசாந் வடநேரே வழங்கினார்
மனைவிக்கு கொலை மிரட்டல் கணவர் அதிரடி கைது

Leave a Comment